கட்டுக்குள் வராவிட்டால் பல நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம்!

Thursday, December 15th, 2016

பருவநிலை மாற்றம் காரணமாக பூமி அதிக அளவு வெப்பமாகி, பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலை நீடிக்குமானால் பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும். இதனால், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஐ.நா. வில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் போது, பூமியின் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்துள்ளன. இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டமைப்பில் இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், கென்யா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன.

Blue Ocean Wave

Related posts: