கட்டார் அமீர் – டிரம்ப் விசேட சந்திப்பு!

Wednesday, July 10th, 2019

அமெரிக்காவின் வொசிங்டன் நகருக்கு விஜயம் செய்துள்ள கட்டார் அமீர் செய்க் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும் இடையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வலைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரம், வர்த்தக தொடர்புகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் பல இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார் அமெரிக்காவிலிருந்து போயிங் விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகி வருவதாகவும் இது தொடர்பில் இரு தலைவர்களிடையேயும் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் முறுகல் நிலை நிலவும் காலப் பகுதியில் கட்டார் அமீருடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டப்படுகின்றது. ஈரானுடன் கட்டார் மிக நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் நாடாக கூறப்படுகின்றது.

சவுதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து என்பன கட்டார் நாட்டை தனிமைப்படுத்தி கூட்டிணைந்து செயற்பட்டு வந்தது. கட்டார் நாடு பயங்கரவாதத்துக்கு அனுசரணை வழங்குவதாகவும், அடிப்படைவாதத்துக்கு உதவி வருவதாகவும் அந்த நாடுகள் குற்றம்சாட்டியிருந்தன. இவ்வாறான தடைகள் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களில் கட்டார் நாடு எதிர்பாராத பலத்துடன் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு துருக்கி, ஈரான் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு காரணம் என்றும் சர்வதேச செய்திச் சேவையான ரொய்டர் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: