கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..

Saturday, May 20th, 2017

தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக குறித்த இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானமே தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத்தில் 208 பயணிகளும், 15 ஊழியர்களும் இருந்துள்ளனர். பயணிகள எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்

Related posts: