கடும் மழை – சீனாவில் 16 பேர் உயிரிழப்பு!

Wednesday, June 12th, 2019

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்துக்கு உட்பட்ட 6 நகரங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தினால் 1300 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 17 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் மழை தொடர்பான விபத்துகளால் 9 பேரும், குவாங்டாங் மாகாணத்தில் 7 பேரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் காணமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த 24 மணி நேரத்திற்கு கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.