கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிரியாவில் வர்த்தக கண்காட்சி!

Saturday, August 19th, 2017

பலத்த பாதுகாப்புக்களுக்கு நடுவில் சிரியாவின் டமஸ்கஸ் நகரில் 59 வது சர்வதேச கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் பல ஆண்டுகளாக வன்முறை தொடர்ந்துவந்த நிலையில், தற்போது நாட்டின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையை அடுத்தே இந்த கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் தலைத்தூக்கிய வன்முறையின் காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறித்த கண்காட்சி, ஐந்து ஆண்டுகளின் பின்னர் நடத்தப்பட்டு வருகிறது.

1954ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் நடந்துவரும் அரபு உலகின் மிகப் பழமையான இவ்வர்த்தக கண்காட்சியானது, பத்து தினங்களுக்கு நடைபெறும்.

இந்த கண்காட்சியானது, வன்முறைகளிலிருந்து மீண்டு நாடு அபிவிருத்தி பாதையில் பயணிப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: