கடும் பனிப்பொழிவு – அமெரிக்காவில் 8 பேர் உயிரிழப்பு!
Saturday, February 2nd, 2019வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்ற
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குளிர் மிக மோசமாக காணப்படுவதுடன், சிகாகோவில் மைனஸ் 30 டிகிரி அளவிலும், மிச்சிகனில் மைனஸ் 37 டிகிரி அளவிலும் குளிர் நிலவுகிறது. இது, மைனஸ் 40 டிகிரியை தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக சிகாகோவில் ஆறு முற்றிலும் பனிக்கட்டியாக மாறியுள்ளது.
இதேவேளை, பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் சுமார் 250 மில்லியன் மக்கள் இந்த கடுங்குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வடகொரியாவில் ஆட்சி மாற்றத்தை நாம் விரும்பவில்லை - அமெரிக்கா !
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டத சீனா!
|
|