கடாபி பேசிய இறுதிவார்த்தைகள்!

Friday, January 13th, 2017

லிபியாவின் முன்னாள் பிரதமர் முயம்மர் கடாபி இறப்பதற்கு முன் மருத்துவமனையில் கூறிய இறுதி வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது.

மரணப்படுக்கையில் கடாபி கூறியதாவது, 40 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறேன்.மக்களுக்கு தேவையான வீடு, மருத்துவமனை, பள்ளிக்கூடம், அவர்கள் பசியில் இருக்கும் போது உணவு கொடுத்தேன். பாலைவனமாக இருந்த Benghazi நகரத்தை விளைநிலைமாக மாற்றினேன். அமெரிக்கா தாக்குதல்களில் இருந்து எழுந்து நின்றேன்.

அவர்கள் என்னை கொல்ல முயன்று என் வளர்ப்பு குழந்தையைக் கொன்றனர். பின்னர், ஆப்ரிக்க ஆணையத்திடம் பணம் கொடுத்து ஆப்ரிக்க மக்களுக்கு உதவினேன்.மக்கள் குழுவே நாட்டை வழிநடத்தும் வகையில் மக்கள் உண்மையான ஜனநாயகத்தை புரிந்து உதவ என்னால் ஆன அனைத்து உதவியை செய்தேன்.

ஆனால், அது ஒருபோதும் போதுமானதாக அமையவில்லை. சுயநலம் காரணமாக 10 வீடு, வசதி என வாழும் மக்கள் திருப்தி அடையவில்லை என சிலர் என்னிடம் கூறினர்.மேலும், அமெரிக்கர்கள் மற்றும் பிற நாட்டினருக்கு ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தேவை என கூறினர். இது ஒரு மோசமான திட்டம் என உணர்ந்தேன்.

அமெரிக்காவில் எந்த இலவச மருந்து, எந்த இலவச மருத்துவமனைகள், எந்த இலவச வீடுகள், எந்த இலவச கல்வியும் இல்லை. மக்கள் பிச்சை அல்லது சூப் பெற நீண்ட வரிசைகளில் போக வேண்டியிருந்தது.

எங்களிடமிருந்து சுதந்திரம் உட்பட அனைத்து இலவசத்தை தங்கள் வசப்படுத்த என்னுடைய சிறிய ஆப்ரிக்க மகன் ஓபாமா என்னை கொல்ல வேண்டும் என முடிவு செய்தான்.முதலாளித்துவம் என்ற பெயரில் அதை கைப்பற்ற அமெரிக்க இராணுவ வரலாற்றில் இடம்பெறும் வகையில் நான் பெரிய படையின் தாக்குதலுக்கு உள்ளானேன்.

நான் இறக்க விரும்பவில்லை, என் மக்கள், நாட்டை பாதுகாக்க நான் இறக்க வேண்டுமெனில் அது தானாக நடக்கும். என் கடைசி மூச்சு வரை மக்களுக்காக போராடுவேன் இதற்கு இறைவன் உதவு புரிவான் என கடாபி கூறியுள்ளார்.

Right to Information act copy