கடல்மட்ட உயர்வால் நீரில் மூழ்கும் தீவுகள்!

அவுஸ்திரேலியாவிற்கு அருகே பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமோன் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தீவுகளை காணப்படுகின்றது. இந்தத் தீவுகளில் 5 தீவுகள் சமீபத்தில் கடலில் மூழ்கி அழிந்துள்ளன.
கடல் மட்டம் அதிகரித்தமை மற்றும் கடலரிப்பு காரணமாகவே இத்தீவுகள் கடலுள் மூழ்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பருவ நிலை மாற்றம் காரணமாக சமீப காலமாக பசிபிக் கடலில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் அரிப்பும் அதிக அளவில் உருவாகிறது. இதனால் சாலமோன் தீவுகளில் உள்ள 5 தீவுகள் கடலில் மூழ்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வாழ தகுதியுள்ள இந்த தீவுகளை மீனவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் அங்கு மக்கள் யாரும் தங்கவில்லை.
எவ்வாறான போதும், இன்னும் 6 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் சுட்டப்படுகின்றது.
இதேவேளை ஹகாடினா, கலி, ரபிட்டா, ரெஹனா மற்றும் ஷொல்ஷீஸ் ஆகிய தீவுகளே நீரில் மூழ்கிய தீவுகள் என்று இனங்காணப்பட்டுள்ளது.
எவ்வாறான போதும், அங்கு கடந்த 1935-ம் ஆண்டில் இருந்தே கடல் அரிப்பும், நீர்மட்டம் உயர்ந்ததால் தீவுகள் மூழ்குவதும் தொடங்கி விட்டன. அப்போது 2 தீவுகள் கடலில் மூழகின. தற்போது 5 தீவுகள் மூழ்கி விட்டன. அவை தவிர 6 தீவுகள் கடல் அரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|