கடற்படை விமானம் விபத்து : அமெரிக்கவில் 16 பேர் பலி!

Tuesday, July 11th, 2017

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அருகில் உள்ள மக்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். விமானம் சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிபத்தில், 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: