கடமை தவறிய உறுப்பினர்களை உயிருடன் நாய்களுக்கு இரையாக்கும் ஐ.எஸ்.!

ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது தீவிரவாத குழுவைச் சேர்ந்த கடமை தவறிய கட்டளைத் தளபதிகளை உயிருடன் நாய்களுக்கு இரையாக்கி அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வருவது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத குழுவைச் சேர்ந்த தமது தலைமை அதிகாரிகளது கட்டளைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய கட்டளைத் தளபதிகளை மரத்துடன் கட்டி வைத்து அவர்களை நாய்களால் கடித்துக் குதறச் செய்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு
வருவதாக வட ஈராக்கில் கவெர் முன்னரங்கில் போரில் ஈடுபட்ட குர்திஷ் பெஷ்மெர்கா கட்டளைத் தளபதியான ஹஸன் கலா ஹஸன் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாத குழு உறுப்பினர்கள் பலர் அண்மைக் காலமாக அந்த தீவிரவாத குழுவிலிருந்து விலகுவதும் சிரியா மற்றும் ஈராக்கில் தாம் பலம்பெற்று விளங்கும் இடங்களிலிருந்து தீவிரவாத குழு உறுப்பினர்கள் பின்வாங்க நேர்வதும் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த மரணதண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது குழுவிற்கு பயன்படாதவர்கள் எனக் கருதும் உறுப்பினர்களுக்கு எதிராக இந்த மரணதண்டனை முறைமையை பிரயோகிப்பதன் மூலம் அந்தக் குழுவைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களை அச்சுறுத்துவதே ஐ.எஸ். தீவிரவாதிகளின் நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது
Related posts:
|
|