கச்சா எண்ணெய் தொடர்பான கருத்தை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் : ஈரான் எச்சரிக்கை!

Friday, July 6th, 2018

கச்சா எண்ணெய் விலை குறித்து டிவிட்டரில் பதிவதை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள அணு ஆயுத ஒப்பந்தம் முறிந்தது. அதன் பின்னர் ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. அத்துடன் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை ஈரானுடனான வர்த்தகத்தை நிறுத்த வலியுறுத்தியது. மேலும் அவ்வாறு நிறுத்தாவிட்டால் அந்த நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்தது.
இதேவேளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கச்சா எண்ணெய் விலை அதிகமாக உள்ளதாக டிவிட்டரில் பதிவு செய்து வருகிறார். அண்மையில் டிவிட்டர் பதிவு ஒன்றில் “பெட்ரோலியப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எண்ணெய் உற்பத்தி நாடுகள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அமெரிக்காவிடம் இருந்து மேலும் சில அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்பதால் எந்த ஒரு நிகழ்வானாலும் அவர்கள் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கின்றனர். இது இருவழி பாதையாக இருக்க வேண்டும். உடனடியாக விலையைக் குறைக்க வேண்டும்” என பதிந்துள்ளார்.
இதற்கு ஈரானின் எண்ணெய் உற்பத்தித் துறை அதிகாரி ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ஆயில் அமைச்சகத்தின் இணைய தளத்தில், “டொனால்ட் டிரம்ப் இவ்வாறு டிவிட்டரில் பதிவதை நிறுத்த வேண்டும். அடிக்கடி இது போல தரமற்ற எண்ணெய் விலை டிவீட்டுகளால் எண்ணெய் விலை மேலும் 10 டாலர் அதிகரித்துள்ளது” என பதிந்துள்ளார்.

Related posts: