கசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலிசாருக்கு அனுமதி மறுப்பு!

சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59). அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்த அவர்இ தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும் அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் மறுத்து வந்த சவூதி பின்னர் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்தது. அதன்பின்னர் சவூதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது.
இதனை வரலாற்றில் மறைத்த மிக மோசம் நிறைந்த சம்பவம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இச்சம்பவம் சவூதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவூதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தொலைக்காட்சி ஒன்றில் இன்று பேசும்பொழுது அமெரிக்கா நாட்டின் ஆதரவின்றி இதுபோன்ற செயலை துணிவுடன் எந்த நாடும் செய்திருக்கும் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.
சவூதி தூதரகத்திற்குரிய கார் ஒன்று இஸ்தான்புல் நகரில் பூமிக்கடியில் அமைந்த கார் நிறுத்தும் இடத்தில் இருந்து துருக்கி நாட்டு போலீசாரால் நேற்று மீட்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் துருக்கி போலீசார் 2 முறை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று சவூதி தூதர அதிகாரியின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து துருக்கி போலீசார் சவூதி அரேபிய தூதரகத்தில் அமைந்த தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் தேடுதல் பணி மேற்கொள்ள இன்று சென்றனர். ஆனால் அவர்களுக்கு சவூதி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|