ஓவர் டைம் வேலைக்கு முடிவுகட்ட ஐப்பானில் புதிய திட்டம்!

Friday, December 15th, 2017

பணி நேரத்தைக்  கடந்து அதிகமான நேரம் பணிபுரியும் ஊழியர்களிடம் சென்று இசையை எழுப்பி அவர்களை வெளியேற்றுவதற்காக ஒரு ட்ரோனை பயன்படுத்த ஜப்பானிய நிறுவனமொன்று திட்டமிட்டுள்ளது.

நேரமாகிவிட்டது என்ற அறிவுறுத்தலாடங்கிய பாடலான “ஆல்ட் லாங் சைனை” என்னும் பாடலை ஒலித்தபடி அலுவலக நேரம் முடிந்தவுடன் இந்த ட்ரோன்கள் அலுவலகத்தை வலம் வருவதோடு அறிவுறுத்தலை அனைத்து ஊழியர்களுக்கும் கொண்டு செல்லும். ஜப்பான் கடந்த  பல வருடங்களாக அகால மரணங்களை கூட ஏற்படுத்தக்கூடிய பாரிய பிரச்சனையாக மிதமிஞ்சிய பணி நேரத்தையும், அதனால் ஏற்படும் உடல்ரீதியான, உளரீதியான பிரச்சனைகளைக்கட்டுப்படுத்தவே இந்த புதிய நடைமுறையை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அலுவலக பாதுகாப்பு மற்றும் துப்புரவு நிறுவனமான டாய்செய், ப்ளூ இன்னோவேஷன் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான என்.டி.டி ஈஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ட்ரோனை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 “ஆல்ட் லாங் சைனை பாடியபடி ட்ரோன் எப்போது வேண்டுமானாலும் வரும் நீங்கள் எதிர்பார்க்கும்போது உங்களால் வேலை செய்ய முடியாது” என்று டாய்செயின் இயக்குநர்களுள் ஒருவரான நோரஹிரோ கடோ எ.எஃப்.பி குறிப்பிட்டிருந்தார்.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ட்ரோன் சேவையை முதலில் தங்களது சொந்த நிறுவனத்திற்குள்ளேயே சோதனை செய்வும், பிறகு மற்றவர்களுக்கு இதை வழங்குவதற்கும் டாய்செய் திட்டமிட்டுள்ளது.

Related posts: