ஓராண்டில் ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 9 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்!

ஓராண்டுக்கு முன்னதாக சிரியாவின் உள்நாட்டு போரில் ரஷ்யா தலையிட தொடங்கிய பிறகு, அது நடத்திய விமானத் தாக்குதலில் சுமார் 4 ஆயிரம் பொது மக்கள் உள்பட 9 ஆயிரத்திற்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் மற்றும் பிற கிளர்ச்சிக் குழுக்களின் ஆயுதப்படையினரும் இதில் அடங்குவதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் முக்கிய வெற்றிகளை பெறுவதாக தென்பட்டபோது, ரஷ்யா உதவ வேண்டுமென அதிபர் அசாத் முறையிட்டார்.தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதாக ரஷ்யா தெரிவிக்கிறது. ஆனால், ரஷியாவின் தலையீடு சிரியாவில் மனிதகுல பேரழிவை ஆழமாக்கியுள்ளது என்று ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர்.
Related posts:
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு தடுப்புக் காவல் !
பஸ் விபத்தில் : நேபாளத்தில் 14 பேர் பலி!
பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு ஒரு மாத காலம் பூட்டு!
|
|