ஓய்வு பெறுகிறார் கிளென் மெக்ஸ்வெல்!

Friday, November 1st, 2019

அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்ட நாயகன் கிளென் மெக்ஸ்வெல் மன அழுத்தம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியுடனான மூன்றாவது இருபதுக்கு ௲ 20 போட்டியில் விளைாயட மாட்டார் எனவும், குறுகிய காலத்துக்கு தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெக்ஸ்வெல் அணியின் பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி, உளவியல் பயிற்சியாளர்களிடம் தனக்கு குறுகிய காலத்துக்கு ஓய்வு தேவை. தான் மன அழுத்தம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பதால், குறுகிய காலத்துக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் பேசிய அணியின் உளவியல் நிபுனர் டாக்டர் மைக்கேல் லாய்ட் மெக்ஸ்வெலுக்கு ஓய்வு தேவை என்பதை உறுதி செய்து பரிந்துரைத்தார். இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு ௲ 20 தொடரில் இறுதி போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மெக்ஸ்வெலின் இடத்திற்கு அதிரடி துடுப்பாட்ட வீரரான டி ஆர்சி சோர்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Related posts: