ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் காவற்துறையினர் சோதனை – அவுஸ்திரேலிய சம்பவம்!

அவுஸ்திரேலியாவின் பொது ஒலிபரப்பு நிறுவனமான அவுஸ்திரேலியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்தில் அந்த நாட்டின் காவற்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
நீதிமன்ற சோதனை ஆணையுடன் அவர்கள் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆணையில் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி பணிப்பாளர் ஆகியோரின் பெயர்கள் இருந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய படையினர் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டமை தொடர்பாக வெளியாக்கப்பட்ட செய்திகள் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இன்று காலை அவுஸ்திரேலிய காவற்துறையினர் அந்த நாட்டின் பெண் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திலும் சோதனை நடத்தி இருந்து.
நாட்டின் இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்யா - யுக்ரைன் பதற்றம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதம்!
அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக பிரித்தானிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை!
அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 65 பேர் உடல் கருகி பலி!
|
|