ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை!

China-cars (1) Tuesday, September 12th, 2017

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வடக்கு டெக்சாஸ் நகரில் பிளானோ பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு, பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நபர் பொலிஸ் அதிகாரி மீதும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தி உள்ளார். பொலிஸ் அதிகாரியின் பதில் தாக்குதலில் கொலையாளி இறந்தார்.

ஏற்கனவே கொலையாளி சுட்டதில் 7 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கொலையாளி உள்ளிட்ட மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிற்கு சென்ற கொலையாளி அங்கிருந்த பெண் ஒருவருடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து கொலையாளி வீட்டிலிருந்தோரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தோர் பற்றியோ கொலையாளி பற்றியோ தகவல்கள் எதுவும் தெரியவில்லை. பிரச்சினைக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை.