ஒரே நாளில் 1000 பேர் பலி – 33,000 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் 1,203,099 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64,774 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 72 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 312,146 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 1040 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,499 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
|
|