ஒரே நாளில் புகையிரத விபத்தில் 12 பேர் பலி!

Wednesday, November 14th, 2018

மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் புகையிரதத்தில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு புகையிரத காவல்துறை பதில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: