ஒரு நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம்- உலக சுகாதார அமைப்பு!

Monday, September 14th, 2020

நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய நாளில் மாத்திரம் புதிதாக 3 இலட்சத்து 7,930 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவத்துள்ளது.

செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி 3 இலட்சதது 6,857 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கு பின்னர் நேற்றைய நாளிலேயே இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் நாளாந்தம் அதிகளவில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவில் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக் நூற்றுக்கு 44 சதவீதத்தினால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: