ஒருபோதும் உடன்பட முடியாது-  வடகொரியா !

Friday, July 7th, 2017

சர்ச்சைக்குரிய ஆயுதச் சோதனை பேச்சுவார்த்தைக்கு வட கொரியா ஒருபோதும் உடன்படாது  என அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க சுதந்திர தினத்தன்று கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா, உலகின் எந்த பகுதியையும் தாக்க தங்களால் முடியும் என்பதை உலகிற்கு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஏவுகணை சோதனைக்குப் பின்னர் பேசிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்த ஏவுகணை சோதனை, அமெரிக்கர்களுக்குச் சுதந்திரதின பரிசு. வட கொரியா தனது துணிச்சலை அமெரிக்காவுக்குக் காட்டும். ஆயுதச் சோதனை குறித்த பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் உடன்படாது என்றார்.

Related posts: