ஒமைக்ரானுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள ரஷ்யா!

Sunday, December 12th, 2021

தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒமைக்ரானுக்கும் தடுப்பூசியை  கண்டுபிடித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பிரதான தடுப்பூசியை மாற்றுவதற்கான காரணம் எதுவும் இல்லை என கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அலெக்சாண்டர் ஜிண்ட்ஸ்பர்க், ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முந்தைய அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிராக இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஸ்யா கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: