ஒபாமா கொண்டுவந்த அவசர சட்டங்களை இரத்துச் செய்ய டிரம்ப் முடிவு!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் ஒபாமா இயற்றிய பல அவசர சட்டங்களை இரத்து செய்வார் என்று டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டிரம்ப், இம்மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். ஆட்சி மாறவிருக்கும் நிலையில், ஒபாமா அவசர கதியில் சில முடிவுகளை எடுத்து வருகிறார். அவை அடுத்து வரும் ஜனாதிபதிக்கு கொள்கை ரீதியான நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளன.
ஒபாமாகேர் என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிக அதிக அளவில் பயனாளிகளைச் சேர்ப்பது, தேர்தலில் தலையீடு – உளவுக் குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது போன்ற அதிரடி முடிவுகளை ஒபாமா எடுத்து வருகிறார்.
மேலும், மாசுக் கட்டுப்பாடு சட்டம், குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் மாற்றம், கருத்தடை, பாலியல் மாற்ற அவசர சட்டம் ஆகியவையும் குடியரசுக் கட்சியினர் மற்றும் டிரம்ப்பின் எதிர்ப்பை நேரிட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒபாமாவின் பல அவசர சட்டங்களும் முடிவுகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் ஷான் ஸ்பைசர் கூறியுள்ளார்.
Related posts:
|
|