ஒபாமாவை சந்திக்கின்றார் இஸ்ரேலிய பிரதமர்!

Monday, September 19th, 2016

நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் 71 வது அமர்வில் கலந்து கொள்ள நியுயோர்க் சென்றுள்ள அவர்கள் இருவரும், இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதை அடுத்து சில நாட்களுக்குக்குள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இடம்பெறும் இந்த சந்திப்பில், இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைகளுக்கான தீர்வு, மத்திய கிழக்கில் அமைதியையும், பாதுகாப்பையும் நிறுவுவதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Untitled-4 copy

Related posts: