ஐ.நா செயலாளர் நாயகம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

Tuesday, January 2nd, 2018

மலர்ந்துள்ள புத்தாண்டில் வேண்டுகோளுக்கு பதிலாக சிவப்பு எச்சரிக்கை, விடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

செயலாளர் நாயகமாக தாம் பதவியேற்ற போது, 2017 ஆம் ஆண்டினை சமாதான வருடமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும் உலக நாடுகளில் வன்முறை மற்றும் மோதல்களே இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

மக்களின் செயற்பாடுகளுக்கு முன்னர், வானிலை வேகமாக மாற்றமடைவதாக சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா செயலாளர் நாயகம், வேற்றுமைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.