ஐ.நா சபையின் செயலாளராக மீண்டும் போட்டியிடும் அந்தோனியோ குட்டேரஸ்…!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த பதவியை வகிக்க எதிர்ப்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்த்துக்கலின் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த அவர் வெகு விரைவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு தன் நோக்கத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
71 வயதான குட்டேரஸ் 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக பொறுப்பற்றதுடன், இந்த ஆண்டு நிறைவில் அவரின் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைகின்றது.
அந்தோனியோ குட்டேரஸ் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக பதவியேற்க விரும்புவதை தாமதமாக அறிவிப்பதற்கு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளுக்காக காத்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அமெரிக்காவுக்கும் அதிகரித்து வந்த முரண்பாடுகளே இதற்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.
000
Related posts:
|
|