ஐ. நா. அரசியல் விவகாரங்கள் தலைவர் வடகொரியா பயணம்!

Wednesday, December 6th, 2017

ஐ. நா. சபை தனது அரசியல் விவகாரங்கள் தலைவர் ஜெப்ரி பெல்ட்மன் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு வடகொரியா தலைநகர் பியோங்யாங்கை சென்றடைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொள்கை ரீதியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு வடகொரியா அழைப்பு விடுத்திருந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் பியோங்கியாங்கிற்கு ஐக்கிய நாடுகள் சார்பில் நடக்கும் பெரிய அளவிலான பயணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ள நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts: