ஐ.எஸ் பிடியில் அமெரிக்க இராணுவ வீரர்?

ஆஃப்கானிஸ்தானில் தங்கள் படையை சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை ஐ.எஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக வெளியான தகவலை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் மறுத்துள்ளனர்.
ஐ.எஸ் இணைய தளத்தில் ரையன் ஜே லார்சன் என்ற ராணுவ அதிகாரியின் அடையாள அட்டை வெளிப்படையாக பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நேட்டோ படையினரின் இந்த மறுப்பு வந்துள்ளது.
கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக சொல்லப்படும் ஆயுதங்கள், வெடிப்பெருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.
நங்கர்ஹார் மாகாணத்தில் ஆஃப்கன் படைகளுக்கு உதவியாக அமெரிக்க சிறப்பு படையினர் ஐ.எஸ் அமைப்பின் விசுவாசிகள் என்று கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரஸ்சல்ஸ் குண்டுவெடிப்பு எதிரொலி: பாரீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் 190 பேர் பலி? படகு உரிமையாளர் கைது!
கனடாவில் குடும்பத்தையும் வெட்டி கொன்று இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர்!
|
|