ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை வெறி : 128 பொதுமக்கள் கொன்று குவிப்பு!

Tuesday, October 24th, 2017

ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒரு கிராமத்தை சூறையாடும் நோக்கில் அங்குள்ள 128 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளின் போர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் ஒவ்வொன்றாக கூட்டுப்படைகள் கைப்பற்றி வருகின்றன

இந்த நிலையில் ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் 400 அப்பாவி மக்களை மனிதகேடயமாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது.தற்போது சிரியாவில் உள்ள Qaryatayn பகுதியில் அப்பாவி பொதுமக்கள் 128 பேரை கொத்தாக கொன்று குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலரையும் கழுத்து துண்டிக்கப்பட்டும் துப்பாக்கியால் சுட்டும் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்களை அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.இந்த கொடூர சம்பவம் கடந்த 48 மணி நேரத்தில் னடந்திருக்கலாம் எனவும், அந்த கிராமத்தை சூறையாடும் நோக்கில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் எனவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: