ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் – யூரோபோல் எச்சரிக்கை!

Saturday, December 3rd, 2016
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பிய இலக்குகளை குறிவைத்து அந்த குழு தாக்குதல்களை முடுக்கிவிடும் என்று யூரோபோல் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல் முகமை எச்சரித்துள்ளது.

அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு போராளிகள் மீண்டும் ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிப்பார்கள் என்றும், கார் குண்டு மற்றும் கடத்தல் என மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்திய தந்திரோபாயங்களை கையாள்வார்கள் என்றும் யூரோபோல் தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பாவில் உள்ள அகதி முகாம்களில் தீவிரவாதிகள் ஊடுருவும் நிலையில், சில சிரியா அகதிகள் அவர்களின் ஆட்சோர்ப்புக்கு பலிகடாக ஆகலாம் என்றும், என்றும் யூரோபோல் எச்சரித்துள்ளது.

ஆனால், அணு நிலையங்கள் போன்ற முக்கியமான தேசிய உள்கட்டமைப்புகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே யூரோபோலின் அறிக்கை கூறுகிறது. இலகுவான இலக்குகளை குறிவைத்து தாக்கவே தீவிரவாதிகள் விரும்புவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

_92804315_gettyimages-625320912

Related posts: