ஐ.எஸ் தீவிரவாதிகள் – துருக்கி இராணுவம் இடையே கடும் மோதல்!

Sunday, December 25th, 2016

வட சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மோதலில் சுமார் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று துருக்கி இராணுவம் தெரிவித்துள்ளது.

அல்-பாப் நகரை சுற்றி ஒரே இரவில் 140க்கும் மேற்பட்ட ஐ.எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளிடமிருந்து அல்-பாப் நகரை மீட்க துருக்கி  இராணுவம் மற்றும் அதன் உள்ளூர் போராளி குழுக்கள் முயற்சித்து வருகின்றன. மேலும், சமீப நாட்களில் அந்தப் பகுதிகளில் மோதலானது மிகவும் தீவிரமடைந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அதனால், சமீபத்திய மோதல் தொடர்பாக  இராணுவம் தெரிவித்துள்ள தகவல்களை உறுதிப்படுத்தவ முடியவில்லை.

_93118526_gettyimages-629500480

Related posts: