ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தானில் இராணுவம்!

Friday, September 2nd, 2016

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பாகிஸ்தானில் உள்ளதை முதல் முறையாக அந்நாட்டு இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவம், 300-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் சூத்திரதாரி மற்றும் உயர்மட்டத் தளபதியையும் கைது செய்துள்ளதாக செய்தி தொடர்பாளர் (லெப்டினன்ட் ஜெனரல் அசிம் பஜ்வா ) தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட ஐ.எஸ் அமைப்பின் முயற்சிகளை ராணுவம் முறியடித்ததாகத் தெரிவித்தார். கடந்த மாதம், குவெட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் . இருந்தது என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

160719083202_isis_isil_islamic_state_flag__512x288_afp_nocredit

Related posts: