ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை பயிற்சி அளித்தவர் ஆஸ்திரேலியாவில் கைது!

Thursday, March 2nd, 2017
சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர்.
42 வயதான அந்த நபர், ஏவுகணைகள் கண்டறிவது எப்படி மற்றும் சொந்தமாக ஏவுகணைகள் உருவாக்குவது எப்படி? என ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொல்லிக் கொடுத்ததாக போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மேலும், ஏவுகணை தொழில் நுட்பங்கள் குறித்து அந்த மனிதர் ஆராய்ச்சி செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்தாண்டு 100 பேர் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக அந்நாட்டு குடியேற்ற அமைச்சர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

201702281748410694_Australia-man-arrested-on-charges-of-helping-Islamic-State_SECVPF


மத்திய ஆபிரிக்காவில் வன்முறை: ஐ.நா. படைகள் விரைவு!
அதிபரைப் பதவி விலகக் கட்டாயப்படுத்த முடியும் : எதிர்க்கட்சி தலைவர்!
வட கொரியா நிலக்கரியை இறக்குமதி செய்ய சீனா தாற்காலிக தடை!
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரின் சொத்துக்களை முடக்குமாறு பரிந்துரை!
வடகொரிய தலைவருக்கு உணவு சமைத்தவர் மாயமான விவகாரம் : வெளிச்சத்துக்கு வந்த உண்மை!