ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி குறிறச்சாட்டு!

Thursday, August 11th, 2016

அண்மையில் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதை தடுக்கும் வண்ணம் உள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் சவுசோக்லு தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அதிகாரிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை மிகவும் தவறாக உள்ளதாகவும் மேலும் மேற்கத்திய நாடுகள் துருக்கியுடனான நட்பை துண்டித்தால் அது அவர்களின் தவறே ஒழிய அங்காரா, ரஷியா, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் கொண்ட உறவு காரணம் அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 சதம் துருக்கியர்கள் தான் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு முன்னதாக அது 50 சதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: