ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியது பிரித்தானியா : கனடாவின் அதிரடி முடிவு!

Thursday, March 30th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்பில் தெரசா மே நேற்று கையெழுத்திட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானியாவுடன் வர்த்தக ரீதியான எங்கள் நட்பு தொடரும்.

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பிரித்தானியாவோடு இன்னும் நெருக்கம் காட்டவே விரும்புகிறோம். பிரித்தானியா விலகலால் எங்கள் நட்புறவில் எந்த மாறுதலும் இருக்காது என ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

தற்போது பிரித்தானியா கனடாவின் நான்காவது மிக பெரிய வர்த்தக பங்குதாரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: