ஐரோப்பாவிலிருந்து விலகும் டொனால்ட் டரம்ப்! கடுமையாக எச்சரிக்கும் நேட்டோ!

Monday, November 14th, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனித்து செயற்பட விரும்புவது குறித்து நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் தனித்து இயங்குவதோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து விலகி நிற்பதோ உலக நாடுகளுக்கு ஆரோக்கியமான விடயமாக அமையாது என்று நேட்டோ அமைப்பின் செயலளர் நாயகம் ஜென்ஸ் ஸ்ரொல்டன்பேர்க் தெரிவித்துள்ளார்.

மேற்குலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள் இந்த தசாப்த்தத்தில் பாரிய பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.டொனால்ட் ட்ரம்ப் தனது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, மேற்கத்தேய இராணுவக் கூட்டணியான நேட்டோவால் எதுவித பயனும் இல்லை என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மேலும் நேட்டோ தனது கடமையை சரியாக நிறைவேற்றவில்லையாயின் தாக்குதல் ரீதியான உதவிகளை நேட்டோவிடம் இருந்து அமெரிக்கா பெற நேரிட்டால், ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், எப்படி நேட்டோவுடன் இணைந்த செயற்படப் போகின்றார் என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நேட்டோ அமைப்பின் இயக்கத்திற்கு அமெரிக்காவே 70 சதவீமான நிதிப்பங்களிப்பை வழங்குகின்றது.

ஆனால் ட்ரம்பின் நிலைப்பாடு இனி எவ்வாறு அமையும் என்பதில் குழப்பம் நீடிப்பதால், ஏனைய நாடுகளில் இருந்து நிதியை திரட்ட நேட்டோ தயாராகலாம் எனவும் கூறப்படுகின்றது.இதேவேளை, சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு போன்றவற்ற நாம் அனுபவிப்பது மிகவும் எளிது. இந்த உறுதியற்ற காலங்களில் எங்களுக்கு வலுவான அமெரிக்க தலைவர்கள் வேண்டும்.அத்துடன் நமது சுமைகளை சுமப்பதற்கான நியாயமான தோள்களாக ஐரோப்பியர்கள் வேண்டும் என நோர்வேயின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

w-1

Related posts: