ஐரோப்பாவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி – ஐக்கிய நாடுகள் சபை!

Saturday, December 24th, 2016

ஐரோப்பாவை சென்றடையும் நோக்கில் அகதிகளாக குடிபெயர்ந்தவர்களில் ஐந்தாரயிரத்திற்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி மரணித்ததாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் மத்திய தரைக்கடல் ஊடாக பயணம் மேற்கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று  இத்தாலி கடற்கரை பகுதிக்கு  அப்பால் இரு கப்பல்கள் சேதமானதாக வெளியான தகவலை தொடர்ந்து மரண எண்ணிக்கை      5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி கடற்பிரதேசத்தில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் மாத்திரம் குறைந்தது 90 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் குடியேறிகளுக்கு தஞ்சம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் வலியுறுத்துள்ளது.

UN-GENERAL-ASSEMBLY-626x380

Related posts: