ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு ஐரோப்பாவே பொறுப்பு- ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் !

Saturday, February 18th, 2017
ஐரோப்பாவின் பாதுகாப்பை அதிகரிக்கும் செயற்பாடுகளை ஐரோப்பாவே மேற்கொள்ள வேண்டும் எனவும் அது தொடர்பில் ஐரோப்பா அமெரிக்காவிடம் உதவி கோரக் கூடாது எனவும் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல் (Sigmar Gabriel) தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த கருத்தை அவர், ஜேர்மனியில் உள்ள பொன் (Bonn) நகரில் நேற்று ஆரம்பித்த G20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஐரோப்பாவின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா வருந்தத் தேவையில்லை என அமெரிக்கர்கள் வாதிட்டு வருகின்றனர். ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து இனிமேல் அமெரிக்காவிடம் உதவி கோரத் தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிழக்கு உக்ரைனின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு தொடர்பில் ரஷ்யாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது என தெரிவித்த சிக்மார், பிரிவினைவாதிகள் தங்களது ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பது தொடர்பில் ரஷ்யா செல்வாக்கு செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 ger_mini1-720x480ger_mini1-720x480

Related posts: