ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகல்!

Saturday, June 29th, 2019

ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ், Sir Jony Ive  அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அப்பிளை உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்ற உதவிய சேர் ஜொனி ஐவ், Sir Jony Ive  தனது தனிப்பட்ட முயற்சிகளுக்காக அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர் ஜொனி இயய்வ், மெக் ((Mac)), ஐபொட் (iPod) ஐபோன் (iPhone)  என்பனவற்றை வடிவமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் லவ்ஃப்ரொம் LoveFrom என்ற வணிகத்தை சேர் ஜொனி ஐவ், ஆரம்பிக்க உள்ளதாகவும், அப்பிள் நிறுவனம் அதன் முதலாவது வாடிக்கையாளராக அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்த இது இயற்கையான நேரமாக உள்ளது என சேர் ஜொனி ஐவ், தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அப்பிளின் மறுமலர்ச்சியில் அவரின் பங்கு அள்பரியது என அப்பிள் நிறுவனத் தலைவர் ரிம் குக் (Tim Cook) தெரிவித்துள்ளார்.