ஐந்து பூஜ்யங்கள் நீக்கும் வெனிசூலா!

Saturday, July 28th, 2018

வெனிசூலா நாணயத் தாள்களிலிருந்து ஐந்து பூஜ்யங்களை நீக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடூரோ வியாழக்கிழமை அறிவித்தார்.

வெனிசூலாவில் தற்போது பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இதனால், அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச நிதியம் நடப்பு ஆண்டில் மட்டும் வெனிசூலாவில் பணவீக்கம் 10 லட்சம் சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இதன் காரணமாக, நாணயத் தாள்களிலிருந்து மூன்று பூஜ்யங்களை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், அதிபர் மடூரோ பொலிவர் நாணயத் தாள்களிலிருந்து ஐந்து பூஜ்யங்களை நீக்க அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

பொலிவர் நாணயத் தாள்களிலிருந்து ஐந்து பூஜ்ஜியங்களை நீக்குவதன் மூலமாக, நாம் ஒரு புதிய, நிலையான நிதி மற்றும் நாணய அமைப்பு முறையை உருவாக்க முடியும் என்று மடூரோ தெரிவித்துள்ளார்.

Related posts: