ஐக்கிய அரபு அமீரகத்தில் வராலாறு காணத மழை – விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Thursday, April 18th, 2024ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்றுமன்தினம் (16) பெய்த கனமழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகளில் நீர் தேங்கியதனால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு சென்ற பல விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
விமான ஓடுபாதையில் வெள்ள நீர் புகுந்ததினால் விமானங்கள் மற்றும் மகிழுந்துகள், நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|