ஐஎஸ் குழு இரசாயன குண்டு தாக்குதல்!

சிரியாவில் உள்ள விமானத் தளம் ஒன்றைக் கைப்பற்ற முயலும் ஐஎஸ் குழு, அரச படையினர் மீதானஇரசாயன குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது..
தலைநகர் டாமஸ்கஸுக்கு 450 கி.மீ. கிழக்கில் அமைந்திருக்கும் தெய்ர் எஸ்ஸோர் என்ற விமான தளத்தை கைப்பற்றுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஎஸ் குழு முயன்றுவருகிறது. இந்த இடம் ஈராக் எல்லை அருகில் அமைந்திருக்கிறது.
அரச படையினர் மீது ஐஎஸ் குழுவினர் “மஸ்டர்ட்” வாயு எனப்படும் கந்தகம் அடங்கிய நச்சுவாயுக் குண்டுகளை வீசுவதாக செய்திகள் கூறுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட விமான தளம் ஐஎஸ் குழுவிற்கு வியூக ரீதியாக மிக முக்கியமானது. இதனைக் கைப்பற்றினால் தாங்கள் வலுவாக உள்ள ரக்காவிருந்து ஈராக்கில் உள்ள தங்கள் குழுவினரை எளிதில் சென்றடையலாம் என ஐஎஸ் குழு கருதியெ தமது தாக்குதலை அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
மக்கள் வழங்கிய தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் - ராகுல் காந்தி
பாடசாலையில் தீ விபத்து - கென்யாவில் 7 பேர் பலி!
தகவல்களை அறிந்து கொள்ளும் சர்வதேச தினம் இன்று!
|
|