ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கம்!

இந்தியாவின் வங்கிகள் மற்றும் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்களில் (ஏ.டி.எம்) இருந்து பணம் எடுப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் மதிப்பு உயர்வான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோதியால் நவம்பர் மாதம் 8 ஆம் நாள் இரவு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஊழலை ஒழிப்பதற்காக என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த எதிர்பாராத நடவடிக்கையால் வங்கிகளில் பண நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவே, வங்கிகளிலும், பணம் வழங்கும் எந்திரங்களிலும் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டியே கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்பட்டது.
இந்தியாவின் மிக பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தல்களில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு மாபெரும் வெற்றிக்கு இந்த கொள்கை பெரியதொரு காரணமாகியிருப்பதாக கருதப்படுகிறது.
Related posts:
|
|