ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்து!

Saturday, April 8th, 2017

நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளதாக இஸ்ரேல் விண்வெளி தொழிலகம் அறிவித்துள்ளது.

இதன் பெறுமதி சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பாரிய அளவிலான இந்த உடன்படிக்கையின் நடுத்தர தூரத்தை குறிவைத்து தாக்கும் நவீன ஏவுகணை அமைப்புக்கான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசுடன் இஸ்ரேல் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த உடன்படிக்கை வெளிப்படுத்துவதாக, இஸ்ரேல் விண்வெளி தொழிலகத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோசப் வெஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: