ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவு – இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஆரம்பம்!
Friday, December 1st, 2023ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (30) வரை இஸ்ரேலால் கடத்தப்பட்ட 110 பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காஸா பகுதியில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
Related posts:
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலி!
கவிஞர் இப்னு அசுமத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சர்வதேச இலக்கிய விருது வழங்க...
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை - உலக சந்தையில் விலை உயர்வு!
|
|