ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 28th, 2019

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில் அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts: