ஏமனில் 34 பேரின் உயிரை காவுகொண்ட கொலரா நோய்!

Wednesday, May 10th, 2017

ஏமனில் இரண்டாவது ஆண்டாகவும் படையெடுத்துள்ள காலரா நோயால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் 27 முதல் மே 7ஆம் திகதி வரை 9 மாகாணங்களில் 2,022 பேர் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் சிரியா, தெற்கு சூடான், நைஜீரியா மற்றும் ஈராக் நாடுகளை போல் மனிதாபிமான அவசர நிலை உள்ள நாடாக ஏமன் திகழ்வதாகவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏமனில் நிலவும் போர் சூழல் காரணமாக மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் தூய்மையான குடிநீர் கிடைக்கப்பெறாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: