ஏஞ்சலா மெர்க்கலிற்கு புகலிடம் மறுப்பு!

Friday, November 25th, 2016

ஜேர்மனி நாட்டில் புகலிடம் பெறுவதற்காக பெற்ற மகளுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எனப் பெயர் சூட்டிய பெற்றோருக்கு அந்நாட்டு அரசு புகலிடம் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா நாட்டை சேர்ந்த Tema மற்றும் Mamon Al-Hamza என்ற தம்பதி கடந்தாண்டு புகலிடம் கோரி ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். கர்ப்பிணி பெண்ணான அவர் கடந்த டிசம்பர் 27-ம் திகதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

புகலிடம் கோரி வருபவர்களை அன்புடன் அரவணைக்கும் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரையே தனது குழந்தைக்கு வைக்க தாயார் தீர்மானித்துள்ளார். இதற்கு தந்தையும் சம்மதம் தெரிவிக்க குழந்தைக்கு ஏஞ்சலா மெர்க்கல் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாட இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஜேர்மன் குடியமர்வு அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியில் அவர்களுக்கு அரசு புகலிடம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ள பெற்றோர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.எனினும், புகலிடம் கிடைக்காவிட்டாலும் அடுத்த ஓராண்டிற்கு அவர்களை தாய்நாட்டிற்கு திருப்ப அனுப்பப்பட மாட்டார்கள் எனவும் ஒரு வருடத்திற்கு மேல் ஜேர்மனியில் தங்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் குடியமர்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

புகலிடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் தனது பிள்ளைக்கு ஏஞ்சலா மெர்க்கல் எனப் பெயர் சூட்டிய பெற்றோர் தற்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: