எல்லை விவகாரம் – இந்தியா- சீனாவுக்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன இராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது. இதனால் இந்திய – சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.
இந்நிலையிலேயே இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது. சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர்.
ஆகவே, சீனா- இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|