எல்லையில் இராணுவத்தை நிறுத்த அமெரிக்க முடிவு!

Thursday, April 5th, 2018

மெக்சிகோ எல்லையில் மக்களின் ஊடுருவலை தடுப்பதற்காக அப்பகுதியில் இராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் எல்லை தாண்டி வந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

இந்த ஊடுருவலை தடுப்பதற்காக ஏற்கனவே மொத்தம் உள்ள 3145 கிலோ மீட்டர் எல்லையில் சில பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதி உள்ள தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.

இதற்கு மெக்சிகோவும், கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி தடுப்பு சுவர் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.அதற்கு முன்னதாக எல்லை முழுவதும் இராணுவத்தை நிறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

விரைவில் இதற்கான திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு எல்லை பாதுகாப்பு பணி இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கும் மெக்சிகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: